×

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 கேட்டு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

 

புதுக்கோட்டை, ஜூன் 23: குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் எம்.இந்திராணி தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.முத்தையா தொடக்கவுரையாற்றினார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.அய்யாதுரை கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

தோழமைச் சங்க நிர்வாகிகள் என்.ராமச்சந்திரன், கே.நாகராஜன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கு.சத்தி நிறைவுரையாற்றினார். முன்னதாக மாவட்ட துணைத் தலைவர் சி.மணிமுத்து வரவேற்க, பொருளாளர் ஏ.செல்வம் நன்றி கூறினார். சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 வழங்கக் வேண்டும், விலைவாசி உயர்வை ஈடுகட்ட இதர ஓய்வூதியர்களுக்கு வழங்குவதைப் போல அகவிலைப்படி வழங்க வேண்டும். அரசாணை 41ஐ 2026 பிப்ரவரி முதல் தேதியில் இருந்து அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தின் போது எழுப்பப்பட்டது.

 

Tags : Nutrient ,rich ,Anganwadi ,Pudukottai ,Pudukottai District Collectorate ,Tamil Nadu… ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...