×

ஆலையில் அமோனியா விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

 

சென்னை: ஆலையில் அமோனியா விஷவாயு கசிந்த விபத்தில் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். மொத்த எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. பெரியபாளையம் அருகே நேற்று இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. ஆலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு காரணமாக 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மயக்கமடைந்துள்ளார். அம்மோனியா வாயுவை சுவாசித்த சில தொழிலாளர்களுக்கு வாய், மூக்கில் ரத்தம் கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்ட 9 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 9 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 9 பேரில் 7 பெண்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அமோனியா வாயு கசிவு பாதிப்பை அடுத்து சம்பவ இடத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்துள்ளது. அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழு பெரியபாளையத்துக்கு விரைந்துள்ளது.

இந்நிலையில், ஆலையில் அமோனியா விஷவாயு கசிந்த விபத்தில் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். மொத்த எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த சீதா (23) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அமோனியா கியாஸ் கசிவு விபத்தில் உயிரிழந்த 8 பேரும் ஒரிசாவைச் சேர்ந்தவர்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

Tags : vishavayu attack ,Chennai ,Stanley Hospital ,Beriyapaliam ,
× RELATED விவசாயிகளுக்கு அடுத்த பேரிடி;...