×

மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே கட்சி எம்.பி.க்கள் 6 பேர் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தாவல்

மும்பை: மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே கட்சி எம்.பி.க்கள் 6 பேர் ஏக்நாத் ஷிண்டே அணியில் இணைந்துள்ளனர். உத்தவ் தாக்கரே சிவசேனையை சேர்ந்த சஞ்சய் ஹரிபாவ் ஜாதவ், பாப்சாஹிப் ராஜாராம், ஓம் பிரகாஷ் பூபால்சிங், சஞ்சய் தினா பாட்டீல், சஞ்சய் உத்தம்ராவ் தேஷ்முக், நாகேஷ் பாபுராவ் பாட்டீலும் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தாவினர். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஷிண்டே முன்னிலையில் 6 எம்.பி.க்களும் அவரது அணியில் இணைந்தனர். ஷிண்டே அணிக்கு தாவிய 6 எம்.பி.க்களின் பதவிகளை பறிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

Tags : Uthav ,Thackeray Party ,Maratiya B. ,Aknath Shinde ,Mumbai ,Uthav Thackeray ,Party ,Maratiya ,Eknath Shinde ,Sanjay Haribav Jadav ,Bappsahib Rajaram ,Om Prakash Bhopalsing ,Sanjay Dina Patil ,Sanjay Uttamrao Deshmukh ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...