×

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சூறாவளிக்​காற்று வீசும் என்பதால் மீனவர்​களுக்கு எச்சரிக்கை

 

சென்னை: தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சூறாவளிக்​காற்று வீசும் என்பதால் மீனவர்​களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட அறிவிப்பு: ராயலசீமா மற்​றும் அதனை ஒட்​டிய பகு​தி​களின் மேல் சுமார் 3.1 கிமீ மற்​றும் 4.5 கிமீ உயரத்​தில் வளிமண்டல காற்​றழுத்த சுழற்​சிகள் நில​வு​கின்​றன. இதன் காரண​மாக தமிழகத்​தில் இன்று ஒருசில இடங்​களில் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். கோவை மாவட்​டத்​தின் மலைப்​பகு​தி​கள் மற்​றும் நீல​கிரி, திண்​டுக்​கல், தேனி, சிவகங்கை மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் இடி, மின்​னல் மற்றும் பலத்த காற்​றுடன் கூடிய கனமழை பெய்​யக்​கூடும்.

23ம் தேதி(நாளை) தென் தமிழகத்​தில் ஓரிரு இடங்​களில் மித​மான மழை, இதர தமிழகத்​தில் லேசானது முதல் மித​மான மழை​யும் பெய்​யக்​கூடும். சென்னை மற்​றும் புறநகர் பகு​திகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் ஓரிரு பகு​தி​களில் இடி, மின்​னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது. அதி​கபட்ச வெப்​பநிலை 100 டிகிரி, குறைந்​த​பட்ச வெப்​பநிலை 82 டிகிரி ஃபாரன்​ஹீட் அளவை ஒட்டி இருக்​கக்​கூடும். தமிழக கடலோரப் பகு​தி​கள், மன்​னார் வளை​குடா மற்​றும் அதனை ஒட்​டிய குமரிக்​கடல் பகு​தி​களில் இன்று சூறாவளிக்​காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்​தி​லும், இடை​யிடையே 60 கி.மீ. வேகத்​தி​லும் வீசக்​கூடும். எனவே இப்​பகு​தி​களுக்கு மீனவர்​கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags : Tamil Nadu ,Chennai ,Meteorological Centre ,Chennai Meteorological Centre ,Royalaseema ,
× RELATED தமிழகத்தில் இருக்கும் போக்சோ...