மகளிர் தின விழா கொண்டாட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கல்லூரியில் நேற்று சர்வதேச மகளிர் தின விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் வித்யாசாகர் கல்விக் குழுமங்களின் தாளாளர் விகாஸ் சுரானா தலைமை வகித்தார். வித்யாசாகர் கல்விக் குழுமங்களின் இயக்குநர். பி.ஜி ஆச்சார்யா அறிமுகவுரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் சி. ஷாலினி கல்லூரியின் துணைமுதல்வர் முனைவர் ஆர். அருணாதேவி ஆகியோர் சிறப்புறையாற்றினர். விழாவில் மகளிர் தின சிறப்பு குறித்து காணொலி காட்சி காட்டப்பட்டது. மாணவியர்களின் திறன்களை அறியும் விதமாக நடனம், யோகா, மற்றும் கராத்தே பயிற்சிகள் செய்து காட்டப்பட்டன. 2020-21 ஆண்டிற்கான பேரவையின் பொறுப்பாளராக ச.காயத்ரியும் பேரவைத் தலைவியாக பி. நம்ரதா, துணை பேரவைத் தலைவியாக கே.வைஷாலினி பொருளாளராக ஜி.எஸ்.ருபிபிரிதிஷா, துணைப் பொருளாளராக கே. அக்ஷயா, பொதுச் செயலாளராக டீ.லதா, துணைச் செயலாளராக ஷாலோம்ரோஸ் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர்.

Related Stories:

>