- செல்லப்பன் வித்யமந்திர் பள்ளி
- தேசிய வில்வித்தை போட்டி
- காரைக்குடி
- 6வது தேசிய வில்வித்தைப் போட்டி
- ஊட்டி
- கர்நாடக
- ஆந்திரப் பிரதேசம்
- மத்தியப் பிரதேசம்
- தெலுங்கானா
- அருணாச்சல பிரதேசம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- செல்லப்பன்…
காரைக்குடி, ஜூன் 22: தேசிய அளவிலான 6வது வில்வித்தைப் போட்டி ஊட்டியில் நடைபெற்றது. இப்போட்டியில் கர்நாடகா, ஆந்திரா, மத்தியபிரதேசம், தெலுங்கானா, அருணாச்சலப்பிரதேசம், தமிழ்நாடு போன்ற பல மாநிலங்களில் இருந்து அனைத்து வில்வித்தை வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இப்போட்டியில் காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேசப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பங்கேற்று 12 வயது உட்பட்ட பிரிவில் சி.ரித்திகா (ஆறாம் வகுப்பு) மற்றும் 10 வயதிற்கு உட்பட்ட பிரிவில் நா.ரிதன் நடராஜன் (இரண்டாம் வகுப்பு) முதலிடம் பெற்று பள்ளிக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் சத்தியன், நிர்வாக இயக்குனர் சங்கீதா சத்தியன், கல்வி இயக்குநர் டாக்டர்.ராஜேஸ்வரி, முதல்வர் லூயிசா ரெமி வாழ்த்தினர்.
