×

90 நிமிடத்தில் 15 கோல் தடுப்பு! அசத்திய 37 வயது கீப்பர்!

கன்சாஸ் சிட்டி அரங்கில் ஈக்வடார்-கியூரகோ இடையே நடந்த இ பிரிவு லீக் ஆட்டம் 0-0 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. அட என்னப்பா… ஒரு கோல் கூட போடலியா? செம போரான ஆட்டமாக இருந்திருக்கும் போலயேன்னு நெனச்சா அத மாத்திக்கோங்க பாஸ்! ஈக்வடார் பசங்க கியூரகோ கோல் பகுதிய சுத்தி சுத்தி வந்து ஷாட் மேல ஷாட் அடிச்சிகிட்டே தான் இருந்தாங்க.

ஆனா… கியூரகோ கோல் கீப்பர் எலாய் ரூம் கொஞ்சம் கூட அசரலியே! பந்து எந்த பக்கத்தில் இருந்து வந்தாலும் என்ன வேகத்தில் வந்தாலும் அங்கே ’ரூம்’ போட்டு யோசிச்ச மாதிரி எலாய் தடுத்துக்கிட்டே இருந்தாரு. ஒன்றரை மணி நேர ஆட்டமும் மாநாடு படத்துல வர்ர லூப் சீன் பாக்குற மாதிரியே இருந்துச்சு. ஒன்னு இல்ல ரெண்டு இல்ல… 90 நிமிஷத்துல மொத்தம் 15 கோல் முயற்சிகளை முறியடித்து பெரும் சுவராய் உயர்ந்து நின்றார் எலாய் ரூம். இன்னும் ஒரு சேவ் கிடைத்திருந்தால் அவர் உலக சாதனையையே சமன் செய்திருப்பார்.

2014 ஜூலை 1ல் பெல்ஜியம் அணிக்கு எதிராக அமெரிக்க கோல் கீப்பர் டிம் ஹோவர்ட் 16 கோல்களை தடுத்து முதலிடம் வகிக்கிறார். நடப்பு தொடரில் ஜூன் 14ம் தேதி பலம் வாய்ந்த ஸ்பெயின் அணிக்கு எதிராக நடந்த எச் பிரிவு லீக் ஆட்டத்தில் கபோ வெர்டே அணி கோல் கீப்பர் வோஸின்ஹா (40 வயது) மொத்தம் 7 கோல் முயற்சிகளை தடுத்தாட்கொண்டு ஓவர் நைட்டில் ஒபாமா ஆனதுபோல, 37 வயது எலாய் ரூமின் கீப்பிங் சாகசமும் கால்பந்து ரசிகர்களை வாய் பிளக்கச் செய்துள்ளது.

 

Tags : E-League ,Ecuador ,Curacao ,Kansas City Stadium ,
× RELATED பாரா பேட்மிண்டன் தொடரில் துளசிமதி...