திருமயம் அருகே சாலையை கடக்க முயன்றபோது வாகனம் மோதி மான் பலி

திருமயம், மார்ச் 9: திருமயம் அருகே பைபாஸ் சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் பலியானது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள லெனாவிலக்கு பகுதியில் திருச்சி-காரைக்குடி பைபாஸ் சாலையை கடப்பதற்கு மான் ஒன்று நேற்று முயற்சி செய்தது. அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், மான் மீது மோதியது. இதில் தலையில் படுகாயமைடைந்த புள்ளிமான் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், நமணசமுத்திரம் போலீசாக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இறந்த மானை மீட்டு திருமயம் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். திருமயம் வனத்துறையினர் மான் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>