×

பெரம்பலூரில் தனியார் மருந்தக குடோன் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் கொள்ளை

பெரம்பலூர்,மார்ச் 9: பெரம்பலூரில் தனியார் மருந்தக குடோனில் பூட்டை உடை த்து 1 லட்சம் மதிப்பிலான பணம், செல்போன் உட்பட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இங்குள்ள சிசி டிவி பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் சிவநேசன்(56). இவர் பெரம்பலூரில் வெங்கடேசபுரம் பகுதியில் மருந்தக குடோன் வைத்துள்ளார். இவர் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மெடிக்கல் ஷாப்புகளுக்கு மருந்து, மாத்திரைகளை விநியோகித்து வருகிறார். இந்த மருந்தக குடோனில் இளங்கோவன் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இளங்கோவன் நேற்று முன்தினம் இரவு (7ம்தேதி) வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை மேலாளர் இளங்கோவன் கடைக்கு வந்து திறந்து பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அவர், உள்ளே சென்று பார்த்தபோது டிராவை உடைத்து, அதில் விற்பனை செய்யப்பட்ட மருந்து பொருட்களுக்கான ரொக்கப்பணம் ரூ.76ஆயிரம் மற்றும் 2 செல்போன் உட்பட பல பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்த பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் பால்ராஜ், சம்பவ இடத்திற்கு வந்து திருடுபோன இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் மருந்தகக் குடோனில் இருந்த சிசி டிவி பதிவு மற்றும் அதற்கு கீழே உள்ள கடையில் இருந்த சிசிடிவி பதிவையும் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரூ.76,000, 2 செல்போன் உட்பட சுமார் 1 லட்சம் மதிப்பில் திருட்டு போயுள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Gudon ,Peru ,
× RELATED 24,000 வேட்டி சேலைகள் பதுக்கல் அதிமுக...