காவல் நிலையத்தில் மகளிர் தினவிழா

வேதாரண்யம், மார்ச் 9: வேதாரண்யம் காவல் நிலையத்தில் பெண் போலீசார் சார்பில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. தாசில்தார் ரமாதேவி தலைமை வகித்தார். ஆர்டிஓ துரைமுருகன், டிஎஸ்பி மகாதேவன், நகராட்சி ஆணையர் மகேஸ்வரி முன்னிலை வகித்தனர். விழாவையொட்டி வேதாரண்யம் சரகத்தை சேர்ந்த தலைஞாயிறு, வாய்மேடு, கரியாப்பட்டினம், வேதாரண்யம், வேட்டைக்காரனிருப்பு மற்றும் காவல் நிலையங்களில் இருந்து பெண் போலீசார், இன்ஸ்பெக்டர் மலர்கொடி தலைமையில் ஒரே கலரில் உடை அணிந்து வந்து ஒருவருக்கு ஒருவர் இனிப்பு மற்றும் பரிசு வழங்கி மகளிர் தினவிழாவை கொண்டாடினர்.

Related Stories:

>