×

பிளாஸ்டர் ஆப் பாரிஸ் முறையில் தயாரிப்பு பொம்மைகள் விற்பனை மும்முரம்

கரூர், மார்ச். 9: கரூர் நகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் முறையில் தயாரிக்கப்பட்ட பொம்மை விற்பனை நடைபெற்று வருகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட கோவை சாலை, ஜவஹர் பஜார், லைட்ஹவுஸ் கார்னர் மற்றும் திருமாநிலையூர் பகுதிகளில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி சமயங்களில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தயாரித்த விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வருவது வழக்கம். அதுபோல, விநாயகர் சதுர்த்தியன்றும் சிலைகள் விற்பனை செய்யப்பட்டன. இதனையடுத்து, கடந்த சில நாட்களாக திருமாநிலையூர் பகுதியில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் முறையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட வண்ண வண்ண பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த வழியாக செல்லும் அனைவரும் இதனை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags : Blaster ,Paris ,
× RELATED இன்னும் 100 நாட்கள்!: பாரிஸ் ஒலிம்பிக்...