எட்டயபுரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

எட்டயபுரம். மார்ச் 9: சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எட்டயபுரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது. தாசில்தார் ஐயப்பன் தலைமை வகித்து பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் எட்டயபுரம் நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி கணேசன், தேர்தல் தாசில்தார் வசந்த மல்லிகா, தலைமையிடத்து துணை தாசில்தார் ராமகிருஷ்ணன் மற்றும் கீழ ஈரால் தொன்போஸ்கோ கலை மற்றும் அறிவியல்  கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். பாரதியார் நினைவு மண்டபத்திலிருந்து துவங்கிய பேரணி பஸ் நிலையம், மேலவாசல், கீழவாசல், பாரதியார் பிறந்த வீடு மற்றும் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்றது.  அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

Related Stories: