தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதி மீறியதாக 19 வழக்குகள் பதிவு

தூத்துக்குடி,மார்ச்9: தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பாக இதுவரை 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. தேர்தல் விதிமுறை மீறல் குறித்து பறக்கும்படை அதிகாரிகள், போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல்நடத்தை விதிகளை மீறி கொடிகள் கட்டியது, சுவர் விளம்பரங்கள் வரைந்தது உள்பட 19 வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டு உள்ளன. தொடர்ந்து போலீசார் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

Related Stories:

>