தங்கப்பழம் மருத்துவக் கல்லூரி சார்பில் ராமநாதபுரத்தில் இலவச மருத்துவ முகாம்

நெல்லை, மார்ச் 9: வாசுதேவநல்லூர் தங்கப்பழம் மருத்துவக் கல்லூரி சார்பில் ராமநாதபுரத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.  வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் கல்விக்குழுமத்தின் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் ஆராய்ச்சி மையம் சார்பில் ராமநாதபுரத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. தங்கப்பழம் கல்வி குழுமத்தின் நிறுவனர் தங்கப்பழம், தாளாளர் எஸ்.டி. முருகேசன் ஆகியோர் முகாமை துவக்கிவைத்தனர். மருத்துவக் கல்லூரி முதல்வரான டாக்டர் சவுந்திரபாண்டியன் முன்னிலை வகித்தார்கள். இதில் சமூக விலகலுடன் பங்கேற்ற நூற்றுக்கணக்கானோருக்கு  டாக்டர்கள் மணிவண்ணன், சுஷா, சிவரஞ்சனி, ஜெபஸ்பாண்டியன், அஜெய்குமார் தலைமையிலான  மருத்துவக் குழுவினர் பல்வேறு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர். அத்துடன் யோகா, அக்குபஞ்சர், பிசியோதெரபி சிகிச்சையுடன் நோய்த் தடுப்பிற்கான உணவு அட்டவணை இலவசமாக வழங்கப்பட்டது. மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரியான டாக்டர் மணிவண்ணன் நன்றி கூறினார்.  ஏற்பாடுகளை இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவ ஆராய்ச்சி மைய ஆசிரியர்கள், அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Related Stories:

>