×

அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவில் - மதுரைக்கு 4 ஏ.சி. பஸ்கள் இயக்கம்

நாகர்கோவில், மார்ச் 9: கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. வெப்பத்தின் பிடியில் சிக்கி மக்கள் தவிக்கிறார்கள். குறிப்பாக பஸ் பயணிகள் பெரும் சிரமத்தை சந்திக்கிறார்கள். இதை கருத்தில் கொண்டு தற்போது பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவில் - மதுரை இடையே குளிர் சாதன வசதிகள் கொண்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக 4 ஏ.சி. பஸ்கள் இயங்குகின்றன. இந்த பஸ்களில் கட்டணம் ₹270 ஆகும். (சாதாரண பஸ்களில் ₹220 கட்டணம்). நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து அதிகாலை 3.30, 5.30, 8 மணி, 9.20, மாலையில் 2.50, 4.30, இரவு 7.40, 9.20 மணிக்கு இந்த பஸ்கள் புறப்பட்டு செல்கின்றன. மதுரையில் இருந்து அதிகாலை 1.25, 2.30, காலை 9.10, பகல் 11.15, 1.20, 2.30, இரவு 8.40, 10.30 மணிக்கு புறப்படுகின்றன. தற்போது இந்த பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. கோடை கால  சிறப்பு பஸ்களாக இவை இயக்கப்படுகின்றன. பயணிகளின் வரவேற்பை பொறுத்து இவை நிரந்தரமாக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். ஏற்கனவே நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே 7 ஏ.சி. பஸ்கள் இயங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Nagercoil ,State Transport Corporation ,4 AC ,Madurai ,
× RELATED நாகர்கோவில் அரசு பொறியியல்...