- நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில்
- நெல்லை
- நெல்லா
- நெல்லையாப்பர் காந்திமதி அம்மன் கோயில் அனித் திருவிழா
- அனித்
- நெல்லையாப்பர்
- கோவில்
- தெவொட்டம்
- நெல்லியப்பார்-காந்திமதி அம்மன் கோயில்
- தீர்த்த்வாரி
நெல்லை: நெல்லையில் புகழ்பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, 9ஆம் நாளான ஜூன் 28-ல் நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் நடைபெறுகிறது; 10ஆம் நாளில் தீர்த்தவாரியுடன் நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோயில் ஆனித் திருவிழா நிறைவடைகிறது. ஆனி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திருவிழாவைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நெல்லையில் குவிந்துள்ளனர்.
இன்று அதிகாலை 4:00 மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டு, சுவாமி மற்றும் அம்பாளுக்கு விஸ்வரூப தரிசனமும் சிறப்புப் பூஜைகளும் நடத்தப்பட்டன. கோயிலின் மகா மண்டபத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட யாகசாலையில் சிறப்பு ஹோமங்கள் வழிபாடுகளுடன் தொடங்கின. காலை 6:30 மணியளவில் வேத மந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க, பிரதான தங்கக் கொடிமரத்தில் முறைப்படி திருக்கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு 16 வகையான திரவியங்களால் மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றன.
விழா நடைபெறும் 10 நாட்களும் காலை மற்றும் மாலை வேளைகளில் சுவாமி-அம்பாள் பல்வேறு சிறப்பு வாகனங்களில் எழுந்தருளி ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளிப்பார்கள். இத்திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான மகா தேரோட்டம் ஜூன் 28ம் தேதி அன்று மிக விமரிசையாக நடைபெற உள்ளது. தேரோட்ட நாளன்று விநாயகர், சுப்பிரமணியர், நெல்லையப்பர் (பெரிய தேர்), காந்திமதி அம்பாள் மற்றும் சண்டிகேசுவரர் ஆகிய 5 தேர்களும் நான்கு ரத வீதிகளிலும் பவனி வரும்.பக்தர்களின் வசதிக்காகவும் பாதுகாப்பிற்காகவும் மாநகராட்சி நிர்வாகமும் காவல்துறையும் இணைந்து பலத்த பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளைச் செய்துள்ளனர்.
