×

மேகதாது விவகாரத்தில் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு கர்நாடகம் பணிந்து விடாது: முன்னாள் அமைச்சர் துரைமுருகன்

சென்னை: மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இப்படிப்பட்ட தீர்மானங்கள் பலமுறை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு கர்நாடக அரசு பணிந்து விடாது என முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

மேலும் அவர்களுக்கு எப்போது வெள்ளம் வருகிறதோ அப்போதுதான் அணையை திறப்பார்கள், அதுவரை தமிழ்நாடு பாலைவனமாகும். ஆகையால் தீர்மானம் மட்டும் போதாது. தமிழ்நாடு ஒட்டுமொத்தமாக எதிர்க்கிறது என்பதை உணர்த்த அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.

அவர்களுடன் நாம் எவ்வளவு பேசினாலும் அவர்கள் மேகதாது அணை கட்ட வேண்டும் என்று தான் பேசுவார்கள். நான் அன்றைய கர்நாடக முதல்வர் கிருஷ்ணா முதல் 6, 7 கர்நாடக முதல்வர்களிடம் பேசி உள்ளேன். தலைவர் கலைஞரும் பேசியிருக்கிறார். ஆனால் எல்லோரும் ஒரே மாதிரி தான் பேசுவார்கள்.

அணையை கட்டினால் இப்போது வருகிற தண்ணீர் கூட வராது. அணை கட்டினால் அணை நிரம்பி வெளியேறும் நீர் மட்டுமே நமக்கு வரும். இவர்கள் திருப்திகரமாக எப்போது திறப்பார்கள் என்று கேட்டால் அவர்களுக்கு எப்போது வெள்ளம் வருகிறதோ அப்போதுதான் திறப்பார்கள். தீர்மானத்தை வரவேற்கிறேன். அது மட்டும் போதாது தமிழகமே ஒட்டுமொத்தமாக எதிர்க்கிறது என்பதை உணர்த்த அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது தவறு இல்லை. அனைத்துக் கட்சி கூட்டத்தை இவர்கள் கூட்ட வேண்டும் அப்போதுதான் தீர்வு கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் உச்ச நீதிமன்றத்தில் சரியான வழக்கறிஞர்களை வைத்து தீர்க்கமாக வாதாட வேண்டும்.

கர்நாடகம் திட்டம் போட்டு மத்திய அரசுக்கு அனுப்புவது இது முதல் முறை அல்ல. இரண்டு மூன்று முறை திட்டம் போட்டு மத்திய நீர்வளத் துறைக்கு அனுப்பினார்கள். அதனால் தீர்மானம் போட்டு வந்தாலும் கர்நாடகம் ஆறு ஏழு கட்டங்களைத் தாண்டி வர வேண்டும். அதற்குள் அதனை தடுத்தாக வேண்டும். ஆகையால் ஒரு ஆர்வத்தோடு புதிதாக வந்திருக்கிற என்னுடைய மதிப்புக்குரிய நண்பர் சிவகுமார் இதிலே முந்தி இருக்கிறார். பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பது சரியானது அல்ல. நீதிமன்றத்தின் முடிவுக்கு பிறகு எப்படி பேச்சுவார்த்தை நடத்த முடியும்.

மேலும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் நமக்கு இழப்புதான் ஏற்படும். ஒரு முறை அல்ல, 36, 37 முறை நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். அதனால் பலன் எதுவும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

 

Tags : Karnataka ,Mekedatu ,Former Minister ,Duraimurugan ,Chennai ,Tamil Nadu Assembly ,Mekedatu dam ,Former Water Resources ,Minister Duraimurugan ,Karnataka government ,
× RELATED முதலமைச்சர் விஜய் தலைமையில் ஜூன் 29, 30...