×

முழு நேரலை.. முழு நேரலை.. அத்தனையும் உருட்டா சார்! தவெக அரசுக்கு அதிமுக சரமாரி கேள்வி

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, அதன் நேரலை ஒளிபரப்பு திடீரென நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன், கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக முடக்கப்பட்டிருந்த சட்டப்பேரவை நேரலை மீண்டும் தொடரும் என்று உறுதியளித்திருந்தார். முதல்வர் கொடுத்த வாக்கைக் காப்பாற்றிவிட்டார் என்று அமைச்சர்கள் பெருமிதம் தெரிவித்த அடுத்த நாளே, விவாதம் தொடங்கியவுடன் நேரலை நிறுத்தப்பட்டுள்ள சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

நேரலை நிறுத்தம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ள அதிமுக ஐடி விங், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கிய நிலையில், பேரவையின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளது. முழு நேரலை.. முழு நேரலை… என நீங்கள் சொன்ன அத்தனையும் உருட்டா சார்! நல்லா இருக்கு சார் உங்க மாற்றம். எந்த வாக்குறுதியும் நிறைவேத்துற மாதிரி ஐடியாவே இல்ல போல, அப்படித்தானே சார்! என்று முதல்வர் விஜய் மற்றும் தவெக அரசை கடுமையாக சாடி உள்ளது.

சட்டப்பேரவை நேரலை திடீரென நிறுத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேகதாது அணை விவகாரம் போன்ற முக்கியப் பிரச்சினைகள் விவாதிக்கப்படும்போது நேரலையை நிறுத்தியது, எதிர்க்கட்சிகளின் குரலை மக்களுக்குச் சென்றடையாமல் தடுக்கும் முயற்சி என விமர்சிக்கப்படுகிறது. பேரவை நிகழ்வுகள் தொடர்ந்து நேரலை செய்யப்படும் என்று தமிழக் அமைச்சர் நேற்று உறுதியளித்த நிலையில், இன்று விவாதம் துவங்கிய உடன் உடனடியாக நேரலை துண்டிக்கப்பட்டது அரசின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. சட்டப்பேரவை விவாதங்களை மக்கள் நேரடியாகக் காண்பது அவர்களின் உரிமை என்றும், அதனைத் தடுப்பது ஜனநாயகத்தை இருட்டடிப்பு செய்யும் செயல் என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

Tags : Adimuga Saramari ,Government of the State ,Chennai ,Tamil Legislative Assembly ,Press Minister ,Rajmohan ,
× RELATED சட்டமன்றத்தில் 2 முறை தேசியகீதம்...