நூலகத்தில் மகளிர் தினம்

திருப்புத்தூர், மார்ச் 9: திருப்புத்தூரில் அண்ணா கிளை நூலகத்தில் மகளிர் தினம் மற்றும் நூல் விமர்சன விழா நடைபெற்றது. கவிஞர் மெய்யாண்டவர் தலைமை வகித்தார். வாசகர் வட்டத் தலைவர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார். நூலகர் மகாலிங்க ஜெயகாந்தன் வரவேற்றார். எழுத்தாளர் ரேவதி அழகர்சாமி எழுதிய “தீண்டுதே தித்திக்கும் தீ “ ‘துளிரின் துளிகள்” ஆகிய புத்தகங்களை பேராசிரியர் சுகன்யா விமர்சனம் செய்து பேசினார். பேராசிரியர்கள் கோபிநாத், திருக்குமரன், எழுத்தாளர்கள் ஈஸ்வரன், சந்திரகாந்தன், சிங்கம்புணரி வாசகர் வட்டத் தலைவர் தென்றல், புலவர் சிவசக்தி குமார், ஆசிரியர் லட்சுமி, செல்வி பூஜிதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மகளிர் தின விழாவில் கலந்துகொண்ட மகளிர் அனைவருக்கும் பாராட்டும் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நூலக உதவியாளர்கள் குணசேகரன் நாராயணன் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories:

>