சாயல்குடி, ஜூன் 19: சாயல்குடி அருகே இரண்டு டூவீலர்கள் மோதிய விபத்தில் இளைஞர் பலியானார். இருவர் படுகாயமடைந் தனர். கடலாடி அருகே ஆப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் மகன் சக்தி குரு(25). இவர், நேற்று இரவு சாயல்குடியில் இருந்து கடலாடி வழியாக ஆப்பனூர் வந்துள்ளார். இவருக்கு பின்னால் இந்திரா நகர் குடியிருப்பை சேர்ந்த நாகராஜ் மகன் நந்தகுமார் (எ) விஷால் (18), மல்லன் மகன் சந்தோஷ்குமார்(20) ஆகியோரும் டூவீலரில் வந்துள்ளனர்.
எதிர்பாராத விதமாக இரண்டு டூவீலர்களும் மோதி விபத்துக்குள்ளானதில் தலையில் பலத்த காயமடைந்த சக்தி குரு சம்பவ இடத்திலேயே பலியானார். காயம் அடைந்த நந்தகுமார், சந்தோஷ் குமார் கடலாடி அரசு மருத்துவமனையில் முதுலுதவி செய்யப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து சாயல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
