×

சமூக நீதி கணக்கெடுப்பு குறித்து ஆளுநர் உரை தர்மபுரி பாமகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

 

தர்மபுரி, ஜூன் 19: 17வது சட்டமன்ற முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் ஆளுநர் உரையில், தமிழகத்தில் சமூக நீதி கணக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவித்தார். இதையடுத்து, தர்மபுரி நகர பஸ் நிலையத்தில், முன்னாள் எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் தலைமையில் பாமகவினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதுகுறித்து வெங்கடேஸ்வரன் கூறுகையில், `பாமகவை தொடங்கிய ராமதாசின் 46 ஆண்டு கால கனவு நிறைவேறுகிறது. ஆளுநர் உரையில் சமூக நீதி கணக்கெடுப்பு இடம் பெற்றதற்கு முக்கிய காரணம், பாமக தலைவர் அன்புமணி தான். பாமகவின் கோரிக்கையை ஏற்று அறிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு பாமகவின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றார்.

Tags : Dharmapuri ,PMK ,Governor ,17th Legislative Assembly ,Tamil Nadu ,MLA ,Venkateswaran… ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...