×

சீசன் எதிரொலி திண்டுக்கல் நாகல்நகரில் துவங்கியது புளி சந்தை

திண்டுக்கல், மார்ச் 9: சீசன் காரணமாக திண்டுக்கல் நாகல்நகரில் துவங்கிய புளி சந்தையில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து வாங்கி சென்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம், சாணார்பட்டி, வேம்பார்பட்டி, கோபால்பட்டி, அஞ்சுகுளிபட்டி, பழநி உள்பட பல பகுதிகளில் ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் புளி விளைச்சல் களைகட்டும். இந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால் புளி விளைச்சல் இருமடங்கு அதிகரித்துள்ளது. திண்டுக்கல் நாகர் நகரில் ஆண்டுதோறும் புளி சந்தை நடப்பது வழக்கம். வாரந்தோறும் திங்கள்கிழமை மட்டும் நடக்கும் இச்சந்தை நேற்று துவங்கியது. முதல்வாரத்திலே புளி வரத்து அதிகளவில் இருந்தது. கொட்டை எடுக்காத புளி ரூ.50க்கும், கொட்டை எடுத்த புளி ரூ.80 முதல் ரூ.120க்கும் என தரத்திற்கேற்ப விற்பனையானது.

இதனை பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக வந்து ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இதுகுறித்து புளி விவசாயி சுப்பிரமணி கூறுகையில், ‘நாகல்நகரில் துவங்கிய முதல்வார சந்தையிலே புளி வரத்து அதிகளவில் இருந்தது. கிராமங்களில் இருந்து விவசாயிகளிடம் இருந்து நேரடியாக வாங்கி விற்பனை செய்கிறோம். தரத்திற்கேற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது’ என்றார்.

Tags : Dindigul Nagaland ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு