சோளத்தட்டை, வைக்கோல் போர் எரிந்து நாசம்

துறையூர், மார்ச் 8: துறையூர் அருகே சோளத்தட்டை, வைக்கோல் போர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. துறையூர் அருகே ஆர்.புதுப்பட்டி வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த மகன் கணேசன். இவருக்கு சொந்தமான ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள வைக்கோல், சோளத்தட்டை போர் நேற்று மதியம் 3 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இது குறித்து உப்பிலியபுரம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். உப்பிலியபுரம் நிலைய அலுவலர் மனோகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடம் சென்று தீயை மேலும் பரவாமல் அணைத்தனர்.

Related Stories:

>