எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் மாநில மாநாட்டில் தீர்மானம்

திருச்சி, மார்ச் 8: தமிழக அரசு அனைத்துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட ஊழியர்கள் பணிப் பாதுகாப்பு மாநில மாநாடு திருச்சியில் நேற்று நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வளன்அரசு வரவேற்றார். மாநில ஒருங்கிணைப்பாளர் கண்ணன் துவக்கி வைத்தார். நிதி காப்பாளர் வெங்கடேஷன், உதவி வணிகவரி மற்றும் துணை வணிகவரி அலுவலர் சங்க தலைவர் லட்சுமணன், கிராம சுகாதார செவிலியர் சங்கம் செந்தாமலர் உள்பட பலர் பங்கேற்றனர். ‘தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களின் தொழிற்சங்க உரிமையை அங்கீகரிக்க வேண்டும். 5 முதல் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அப்ரைசல் முறையை ரத்து செய்ய வேண்டும். எம்ஆர்பி தேர்வு மற்றும் அரசுத்துறை தேர்வுகளில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்க வேண்டும்’ என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சேலம் ரமேஷ் நன்றி கூறினார்.

Related Stories:

>