×

உலக மகளிர் தினத்தையொட்டி குடந்தையில் மினி மாரத்தான் போட்டி



கும்பகோணம். மார்ச் 8: கும்பகோணத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டும், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குபதிவு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மகளிர் மட்டும் பங்கேற்ற மினிமாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மகளிர் கலந்து கொண்டனர். கும்பகோணத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மகளிர் கலந்து கொண்ட மினி மாரத்தான் ஓட்டம் நகராட்சி ஆணையர் லட்சுமி துவக்கி வைத்தார். மினி மாரத்தான் மகாமக குளத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதி வழியாக இதயா மகளிர் கல்லூரியில் நிறைவு பெற்றது. இந்த மாரத்தான் போட்டியில் சென்னை எத்திராஜ் கல்லூரியில் சேர்ந்த மித்ரா முதலாவதாகவும், இரண்டாவதாக மயிலாடுதுறை மாவட்டம் கீதாஞ்சலி, மூன்றாவதாக மயிலாடுதுறை மாவட்டம் சீதாயம்பாள் வெற்றி பெற்றனர். முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாவது பரிசாக ரூ.5000 மூன்றாவது பரிசாக ரூ.3000 வழங்கப்பட்டது.

Tags : Mini Marathon ,Kuttanad ,World Women's Day ,
× RELATED சிலிண்டர் விலை குறைப்பு தேர்தல் நேர...