இடித்துவிட்டு புதிதாக கட்ட வலியுறுத்தல் திருவையாறு தாலுகா அலுவலகத்தில் தேர்தல் ஆலோசனை கூட்டம் வருவாய் அதிகாரி பங்கேற்பு

திருவையாறு, மார்ச் 8: திருவையாறு தாலுகா அலுவலகத்தில் திருவையாறு சட்டமன்ற தொகுதி தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன் தலைமை வகித்தார். திருவையாறு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மஞ்சுளா முன்னிலை வகித்தார். தாசில்தார் நெடுஞ்செழியன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி அரவிந்தன் கலந்து கொண்டு பேசுகையில், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள வருவாய் அலுவலர்கள் தேர்தல் விதிமுறைகள், அதை எவ்வாறு நடைமுறைப்படுத்தும் முறைகள் பற்றி விளக்கி பேசினார். பிறகு திருவையாறு தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை, வாக்காளர் சேவை மையம், தேர்தல் முன்னேற்பாடு பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்து தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் அனைவருக்கும் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள அறிவுரை வழங்கினார். முடிவில் தேர்தல் துணை தாசில்தார் விவேகானந்தன் நன்றி கூறினார்.

Related Stories:

More