×

தஞ்சையில் மகளிர் தினவிழா கருத்தரங்கு

தஞ்சை, மார்ச் 8: தஞ்சாவூர் பெசண்ட் அரங்கத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் மகளிர் தின விழா கருத்தரங்கு நடைபெற்றது. தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறைத் தலைவர் காமராசர் தலைமை வகித்து பேசியதாவது, பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பு, விண்வெளி, ராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆண்களுக்கு நிகராகவும், வேலைகளில் முன்னேறியும்வந்து கொண்டிருக்கின்றார்கள். இருப்பினும் பெண்களுக்கு எதிரான பாலியல் உள்ளிட்ட வன்முறைகள் அதிகமாகிக்கொண்டே வருகின்றன, இவைகளை சட்டரீதியாக மட்டும் தடுத்துவிட முடியாது. நாம் இதற்கான சமூக இயக்கத்தை, போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். ஆண்களுக்கு நிகரான சரிபாதி உரிமைகள் பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும். பெண்களுக்கான இலக்கியங்களும் கவிதைகளும் கட்டுரைகளும் படைக்கப்பட்டு வருவது சிறப்புக்குரியது. இது போல இன்னும் அதிகமாக எழுதப்படவேண்டும், அது பெண்களுக்கான பெண்ணுரிமைக்கான பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு விழிப்புணர்வு பற்றிய செய்திகளை சொல்லும் என்றார். பெண்களுக்கான உரிமைகள்-சட்டங்கள் என்ற தலைப்பில் வழக்கறிஞர் ஜெயந்தி, விளக்காய் எரியும் வீணைகள் என்ற தலைப்பில் வெற்றிச்செல்வி உரையாற்றினர் . கவிஞர் விசுவநாதன் , புகழேந்தி, கவிஞர் வல்லம் தாஜபால், ஏஐடியூசி மாநில செயலாளர் சந்திரகுமார் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியை மாநகர துணை தலைவர் திராவிடமணி தொகுத்து வழங்கினார்.

Tags : Women's Day Seminar ,Thanjavur ,
× RELATED தஞ்சாவூர் நாடாளுமன்ற தேர்தலில் 100%...