குன்னம் சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புக்கான இடம் தேர்வு

பெரம்பலூர்,மார்ச் 8: குன்னம் சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு அலுலர்களின் பயிற்சி வகுப்புகளுக்கான இடம் தேர்வு நடந்தது. இடத்தை தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கர் ஆய்வு செய்தார். தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகிற ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் சட்டமன்றத் தொகுதியில் 1,35,240 ஆண் வாக்காளர்கள், 1,38,442 பெண் வாக்காளர்கள், 13 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,73,695 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 178 இடங்களில் 388 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள வாக்கு பதிவிற்காக 1864 வாக்குப்பதிவு அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கு வாக்குப்பதிவின் போது செயலாற்றும் முறைகள் குறித்து, மூன்று கட்டமாக பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இதனையொட்டி பயிற்சி நடத்தப்படும் மையம் குறித்து, குன்னம் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலரும், பெரம்பலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் குறை தீர்க்கும் அலுவலருமான சங்கர் மேலமாத்தூரில் உள்ள ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆய்வு மேற் கொண்டார்.

வருகிற 17-ம் தேதி முதல் கட்டமாகவும், அதனை தொடர்ந்து அடுத்து, அடுத்து என மூன்று கட் டங்களாக வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு அங்கு பயிற்சிகள் நடத்தப்பட உள்ளதையொட்டி ஆய்வு மேற்கொண்டார். அப்போது பயிற்சி பெறுவோருக்கான குடிநீர், கழிப்பிடம் உள்ளி ட்ட வசதிகள் உள்ளனவா என பார்வையிட்டு, தேவையான வசதிகளை செய்து தருமாறு பள்ளி நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டார். அப்போது குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கான முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான தாசில்தார் கிருஷ்ணராஜ் மற்றும் பள்ளி நிர்வாகிகள், தலை மையாசிரியர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories:

More
>