×

வேதாரண்யம் வட்டார ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்தல்

வேதாரண்யம். மார்ச் 8: வேதாரண்யத்தில் வட்டார அளவிலான தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் மூன்றாம் தெரு அரசு நடுநிலை பள்ளியில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தேர்தல் நடைபெற்றது. தேர்தல் ஆணையராக தலைஞாயிறு வட்டார செயலாளர் செல்வநாதன், துணை ஆணையர் முருகானந்தம் ஆகியோர் நடத்தினர். தேர்தலில் வட்டார தலைவராக அன்பழகன், செயலாளராக இளங்கோவன், பொருளாராக ஜெயம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நிகழ்ச்சியில் மாநில செயலாளர் சித்ரா, மாவட்ட செயலாளர் காந்தி, மாவட்ட தலைவர் புகழேந்தி, மாவட்ட பொருளாளர் ஜெகநாதன் மற்றும் மாவட்ட, வட்டார பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரங்கள் அகற்றம்
கட்சி சார்ந்த சுவரொட்டிகள், கொடி கம்பங்கள், பிளக்ஸ் மற்றும் சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளது. அதன்படி 434 கிராம ஊராட்சிகள், 8 பேருராட்சிகள், 4 நகராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் 12,372 சுவரொட்டிகளும், 1,660 பிளக்ஸ் போர்டுகளும், 941 கொடி கம்பங்களும், 2,925 சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன.

Tags : Vedaranyam ,Primary School ,
× RELATED வேதாரண்யத்தில் 3 நாட்களாக மக்களை...