குளித்தலையில் நிரந்தர பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் விசி கூட்டத்தில் வலியுறுத்தல்

குளித்தலை, மார்ச் 8: குளித்தலையில் கரூர் கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் மாயவன் தலைமை வகித்தார். ஒன்றிய பொருளாளர் பிரவீன் வரவேற்றார். கூட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன், சேலம் மாவட்ட அமைப்பு செயலாளர் நாவரசன் உள்ளிட்டோர் பேசினர். கூட்டத்தில் குளித்தலை நகர மையப்பகுதியில் 50 ஆண்டு காலமாக கோயில் நிலத்தில் இருக்கும் பேருந்து நிலையத்தை புதிய இடம் தேர்வு செய்து நிரந்தர பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பல ஆண்டுகள் கோரிக்கையான தீயணைப்பு நிலையம் குளித்தலைக்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஒன்றிய துணைச் செயலாளர் மகாலிங்கம் நன்றி கூறினார்.

Related Stories:

>