×

நாசரேத்தில் பறக்கும் படையினர் தீவிர சோதனை

நாசரேத், மார்ச் 8: தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப். 6ம் தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. ஆவணங்கள் இன்றி பணம் மற்றும் பொருள்கள் கொண்டு செல்லப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  இந்நிலையில் திருச்செந்தூர் தொகுதி பறக்கும் படை அதிகாரி மணிமொழி செல்வன் ரெங்கசாமி தலைமையில் எஸ்.ஐ மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம், உடன்குடி, மணப்பாடு, காயாமொழி, மெஞ்ஞானபுரம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுப்பட்டு அதிரடி சோதனை நடத்தி வந்தனர்.

இதையடுத்து நாசரேத்தில் நேற்று இரவு வந்த பறக்கும்படையினர் அங்குள்ள சந்தி பஜாரில் வாகனங்களை மறித்து சோதனையிட்டனர். தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை மீறி பணம் கொண்டுசெல்லபடுகிறதா? என  சோதனை நடத்தினர். ஆனால் சோதனையின் போது எதுவும் சிக்கவில்லையென அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்கள், வியாபாரிகள் அத்தியாவசிய பொருள்கள் மற்றும் தேவைக்கு பணம் கொண்டு செல்கையில் அதற்கான ஆவணங்களுடன் செல்ல வேண்டும் எனவும், அவ்வாறு மீறி கொண்டு செல்லப்பட்டது சோதனையில் தெரியவந்தால் பறிமுதல் செய்யப்படும் என்றும், தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் அதற்கான ஆவணங்களை காட்டி திரும்ப பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்தனர்.

Tags : Nazareth ,
× RELATED தமிழகத்தை வஞ்சித்த பாஜவை வீட்டுக்கு அனுப்புவோம்