(வேலூர்) சுற்றுச்சூழல் மன்றம் துவக்க விழா ரெட்டிமாங்குப்பம் அரசு பள்ளியில் படம் உள்ளது

குடியாத்தம், மார்ச் 8: குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ரெட்டிமாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் துவக்கப்பட்டது. பள்ளி தலைமையாசிரியை எலிசா தலைமை தாங்கினார். ஆசிரியர் ஆனந்தகுமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் கருத்துகளை சார்ந்து பாடல், கட்டுரை மற்றும் ஓவிய போட்டிகள் நடைபெற்றது.  இதில் பங்கேற்ற 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர். முடிவில் ஆசிரியை பியூலா சசிகலா நன்றி கூறினார்.

Related Stories:

>