சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு எதிரொலி தூத்துக்குடி மாவட்டத்தில் 32 எஸ்ஐக்கள் அதிரடி மாற்றம் எஸ்பி ஜெயக்குமார் உத்தரவு

தூத்துக்குடி, மார்ச் 8: சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலியாக தூத்துக்குடி மாவட்டத்தில் 32 எஸ்ஐக்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை எஸ்பி. ஜெயக்குமார் பிறப்பித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு போலீஸ் ஸ்டேஷனில் எஸ்ஐயாக உள்ள வி.ஆறுமுகம், குரும்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கும், கோவில்பட்டி மேற்கு போலீஸ் ஸ்டேஷன் எஸ்ஐ ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல்ராஜ், வடபாகம் போலீஸ் ஸ்டேஷனுக்கும், இதே ஸ்டேஷனின் மற்றொரு எஸ்ஐயான குருசந்திரவடிவேல் ஓட்டப்பிடாரம் ஸ்டேஷனுக்கும், நாலாட்டின்புதூர் பெண் எஸ்ஐ அங்குத்தாய், கடம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கும், இதே ஸ்டேஷனில் பணியாற்றும் பெண் எஸ்ஐ காந்திமதி, நாலாட்டின்புதூர் போலீஸ் ஸ்டேஷனுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

 கடம்பூர் எஸ்ஐ பாண்டியன், புதுக்கோட்டைக்கும், கடம்பூர் எஸ்ஐ நவநீதன், தாளமுத்துநகர் போலீஸ் ஸ்டேஷனுக்கும், நாரைக்கிணறு எஸ்ஐ தளவாய்ஜம்புநாதன் நாசரேத்துக்கும், ஓட்டப்பிடாரம் எஸ்ஐ ரமேஷ்குமார், கோவில்பட்டி கிழக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கும், புதுக்கோட்டை எஸ்ஐ முத்துகணேஷ், தூத்துக்குடி தென்பாகத்திற்கும், அதே ஸ்டேஷன் எஸ்ஐ ராஜேஷ் கண்ணா, கோவில்பட்டி மேற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கும், சிப்காட் எஸ்ஐ முத்துகிருஷ்ணன் ஆழ்வார்திருநகரிக்கும், நாசரேத் எஸ்ஐ தங்கேஸ்வரன், சிசிபிக்கும், அதே ஸ்டேஷனில் வேலை பார்க்கும் அனந்த முத்துராமன், செய்துங்கநல்லூருக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

 மேலும் ஆழ்வார்திருநகரி எஸ்ஐ முத்துவீரப்பன் தெர்மல்நகருக்கும், ஏரல் எஸ்ஐ முருக பெருமாள் தூத்துக்குடி மத்திய போலீஸ் ஸ்டேஷனுக்கும், குரும்பூர் எஸ்ஐ குமார், கயத்தாறுக்கும், செய்துங்கநல்லூர் எஸ்ஐ முகமதுபைசல், கடம்பூருக்கும், வைகுண்டம் எஸ்ஐ ரோய்ஸ்டன் தட்டார்மடத்திற்கும், ஆத்தூர் எஸ்ஐ ஜான்சன் தாளமுத்துநகருக்கும், குலசேகரன்பட்டினம் எஸ்ஐ முனியாண்டி வைகுண்டத்திற்கும், தூத்துக்குடி மத்தியபாகம் ராஜாமணி, ஆத்தூருக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

இதுபோல் கன்ட்ரோல் ரூம் எஸ்ஐ விஜயகுமார், கோவில்பட்டி மேற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கும், வடபாகம் எஸ்ஐ சிவராஜா, கோவில்பட்டி மேற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கும், தாளமுத்துநகர் எஸ்ஐ விஜயகுமார் ஏஎல்ஜிஎஸ்சி யூனிட்டிற்கும், தாளமுத்துநகர் எஸ்ஐ மரிய இருதயம், நாலாட்டின்புத்தூருக்கும், தெர்மல் நகர் எஸ்ஐ திருமலைமுருகன், குலசேகரன்பட்டினத்திற்கும், ஏஎல்ஜிஎஸ்சி யூனிட் எஸ்ஐ வி.காமராஜ், கன்ட்ரோல் ரூமிற்கும், சிசிபி எஸ்ஐ செல்வராஜ், நாசரேத்திற்கும், கோவில்பட்டி மேற்கு எஸ்ஐ காந்தி, சிப்காட்டிற்கும், தூத்துக்குடி மத்திய பாகம் எஸ்ஐ இசக்கியப்பன் ஆத்தூர் ஸ்டேஷனிற்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை எஸ்.பி. ஜெயக்குமார்  பிறப்பித்துள்ளார்.

இவர்களில் பலர் ஏற்கனவே நெல்லை, குமரி மற்றும் தென்காசி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டிருந்தனர். ஆனால் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு தற்போது பலர் மாவட்டத்திற்குள்ளேயே சொந்த சட்டமன்ற தொகுதியில் இருந்து வெளியே பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

>