×

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

 

சென்னை: தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, சேலம், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கோவை மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, ஈரோடு, நாமக்கல் , கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூரில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Tamil Nadu ,Meteorological Survey Centre ,Chennai ,Chennai Meteorological Centre ,Nilgiri ,Salem ,Perambalur ,Trichy ,Thanjai ,Dindigul ,Theni ,Madurai ,Sivaganga ,Ramanathapuram ,
× RELATED நான் இல்லை என்றால் இஸ்ரேல் இல்லை: ஜி7 உச்சி மாநாட்டில் ட்ரம்ப் பேச்சு