விமான படை வீரர்களின் மனைவிகள் புற்றுநோயாளிகளுக்கு தலைமுடி தானம்: மகளிர் தினவிழாவில் வழங்கினர்

மாமல்லபுரம்: தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி, பீகார், ஹரியானா, அசாம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விமானப்படை வீரர்களின் மனைவிகள் 500க்கும் மேற்பட்டோர், மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலில் சந்தித்து மகளிர் தினவிழா கொண்டாடினர். அப்போது, அவர்கள் அனைவரும், கையில் ஆளுக்கொரு தபேளா கொண்டு வந்தனர். தென் ஆப்பிரிக்கா தபேளா கலைஞர்கள் உற்சாகமாக தபேளா வாசித்து கொண்டு பாடல்கள் பாட, அந்த பாடல் இசைக்கு ஏற்ப அவர்கள் அரங்கத்தில் நடனம் ஆடினர். விழாவின் முடிவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தலைமுடிகள் உதிர்ந்த பெண் நோயாளிகளுக்கு, விமானப்படை வீரர்களின் மனைவிகள் 50க்கும் மேற்பட்டோர் தங்களது தலைமுடியை வெட்டி தானமாக வழங்கினர்.

Related Stories:

>