×

வண்ணார் சமுதாய முன்னேற்ற நலச்சங்கம் சார்பில் தேர்தல் ஆலோசனை கூட்டம்

நெல்லை, மார்ச் 8: அழகியபாண்டியபுரத்தில் நெல்லை மாவட்ட வண்ணார் சமுதாய முன்னேற்ற நலச்சங்கம் சார்பில் சட்டப்பேரவைத் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது.  கிளைத்தலைவர் ருக்மணியாபுரம் மாரியப்பன், செயலாளர் மாடசாமி, பொருளாளர் சப்பாணி, கவுரவத் தலைவர் சண்முகசுந்தரம், துணைத்தலைவர் நடராஜன் தலைமை வகித்தனர். நெல்லை மாவட்டத் தலைவர் மாரியப்பன், இளைஞர் அணி மாவட்டச் செயலாளர் களக்குடி செல்வம், ஒருங்கிணைப்பாளர் தவிடன் என்ற தாவிதன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வன்னியர் சமூகத்தைப் போல் வண்ணார் சமுதாயத்துக்கும் உள் இடஒதுக்கீடு வழங்க ேவண்டும். வண்ணார் சாதி சான்றிதழில் வண்ணார் (சலவை தொழிலாளர்) என்ற தொழிற்பெயரை நீக்குவதுடன் ராஜகுலம் என்ற ஒரே பெயரில் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலில் நெல்லை தொகுதியில் மாவட்ட நிர்வாக குழுத் தலைவர் இசக்கிமுத்துவை வேட்பாளராக போட்டியிடச்செய்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து நன்றி தெரிவித்த சட்டமன்ற வேட்பாளர் இசக்கிமுத்துஸ கூட்டத்தில் ஆதரவு திரட்டினார்.

Tags : Consultative ,Vannar Community Development Union ,
× RELATED மாதவரம் வடக்கு பகுதி திமுக ஆலோசனை கூட்டம்