×

கொரோனா தடுப்பூசி போட கட்டாயப்படுத்துவதா? ஆசிரியர் கூட்டணி கடும் எதிர்ப்பு

நெல்லை, மார்ச் 8: சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் உள்ளிட்டோரை கொரோனா தடுப்பூசி  போடுமாறு கட்டாயப்படுத்துவதா? என கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆசிரியர் கூட்டணி, கட்டாயப்படுத்தக்கூடாது என வலியுறுத்தி உள்ளது. நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்   காணொலி காட்சி மூலம்  நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நெல்லை மாவட்டத்திலுள்ள 3  மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து வட்டார கல்வி அலுவலர்களுக்கும் வழங்கியுள்ள அறிவுறுத்தலின்படி  மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை ஆசிரியர்களும் 7ம் தேதி மாலை 3 மணிக்குள் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் எனவும் அதன் அறிக்கையை பிற்பகல் சம்பந்தப்பட்ட வட்டார கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் பல்வேறு வட்டார கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தியும், குரல் பதிவும் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.


இதற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அதன் நெல்லை மாவட்டச் செயலாளர் பால்ராஜ்  முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் கூறியிருப்பதாவது:
 தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் செயல்முறை ஆணையில்  கொரோனா தடுப்பூசியை விருப்பமுள்ளவர்கள் மட்டும் போட்டுக் கொள்ளலாம் என்றும் கட்டாயமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை ஆசிரியர்களையும் தடுப்பூசி போடுமாறு கட்டாயப்படுத்தக் கூடாது. தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களில் விருப்பம் உள்ளவர்கள் மட்டும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Teachers' Alliance ,
× RELATED தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முப்பெரும் விழா