நெல்லை, பாளையில் எல்லை பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு

நெல்லை, மார்ச் 8: சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நெல்லை, பாளையில் எல்லை பாதுகாப்பு படையினர், போலீசார் கொடி அணிவகுப்பு பேரணி நடத்தினர். சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அன்பு உத்தரவின் பேரில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையில் நெல்லை சந்திப்பு ரயில்வே ஸ்டேஷன் முன்பிருந்து துவங்கிய எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசாரின் கொடி அணிவகுப்பு பேரணி சிந்துபூந்துறை, மேகலிங்கபுரம், உடையார்பட்டி வழியாக சென்று ராம் தியேட்டர் அருகே நிறைவடைந்தது.

இதில் டவுன் போலீஸ் உதவி கமிஷனர் சதீஷ்குமார், நெல்லை சந்திப்பு இன்ஸ்பெக்டர் மாரிஸ்வரி மற்றும் எஸ்ஐக்கள், போலீசார் மிடுக்குடன் பங்கேற்றனர்.  இதே போல் பாளை பெருமாள்புரத்தில் எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய கொடி அணிவகுப்பு பேரணியில் திரளானோர் பங்கேற்றனர். நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அன்பு உத்தரவின் பேரில் எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசாரின் கொடி அணிவகுப்பு பேரணி பாளை பெருமாள்புரம் புஷ்பலதா பள்ளி முன்பிருந்து துவங்கியது.

மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையில் துவங்கிய இப்பேரணி அன்புநகர் ரயில்வே கேட், காமராஜர் சாலை வழியாக பாளை உதவி கமிஷனர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் பாளை உதவி கமிஷனர் ஜான்பிரிட்டோ, இன்ஸ்பெக்டர்கள் பாளை பெருமாள்புரம் பத்மநாபன், பாளை மகளிர் காவல் நிலையம் ஜெயந்தி, தீவிர குற்றம் தடுப்பு பிரிவு ஜென்சி, எஸ்ஐக்கள் சுதர்சன், சிவகளை மற்றும் போலீசார் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories:

>