×

மரக்காணத்தில் 5 வயது சிறுமி மர்ம சாவு

 

மரக்காணம், ஜூன் 16: மரக்காணம் கரிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ராஜா. இவரது மனைவி சரசு. இவர்களது மகள் மோனிகா (5). கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ராஜா-சரசு ஆகிய இருவரும் தனித்தனியாக வசித்து வருகிறன்றனர். சிறுமி மோனிகாவை, அதே கிராமத்தில் வசிக்கும் அவரது பாட்டி கன்னியம்மாள் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி மோனிகாவை அவரது பாட்டி கடந்த சில நாட்களுக்கு முன் அதே பகுதியில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில் முதலாம் ஆண்டு சேர்த்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிறுமி மோனிகா வழக்கம்போல் அவரது பாட்டி வீட்டில் சாப்பிட்டுவிட்டு தூங்கியுள்ளார். பின்னர் நள்ளிரவில் சிறுமி மோனிகா எதிர்பாராத விதமாக மர்மமான முறையில் இறந்துள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து தகவலறிந்த மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரணிநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிறுமியின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது சிறுமிக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளதும், இதனால் தான் சிறுமி இறந்து விட்டதாக அவரது உறவினர்கள் கூறியுள்ளனர். ஆனால் சந்தேகமடைந்த மரக்காணம் போலீசார், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை மாநிலம் கனகசெட்டிக்குளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் சிறுமியின் இறப்புக்கான உண்மை காரணம் தெரியவரும் என போலீசார் கூறுகின்றனர்.

 

Tags : Marakkanam ,Raja ,Karipalayam ,Sarasu ,Monica ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...