தாவரவியல் விழா

அருப்புக்கோட்டை, மார்ச் 8: அருப்புக்கோட்டை ரமணாஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தாவரவியல் திருவிழா நடந்தது. முதல்வர் கதிர்காமு தலைமை வகித்தார். கல்லூரி பேராசிரியை ஜீலியட் வரவேற்றார். விருதுநகர் கல்லூரி பேராசிரியர்கள் டாக்டர் மேகலிங்கம், நிர்மல் குமார் பேசினர். கல்லூரி செயலாளர் இளங்கோவன் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்தார். கல்லூரி நிர்வாகிகள் ராமச்சந்திரன், சங்கரநாராயணன், விக்னேஷ், டீன் தில்லைநடராஜன், துணை முதல்வர் பெளர்ணா வாழ்த்தி பேசினர். மாணவிகளுக்கு போட்டிகள் நடந்தது. பேராசிரியை கார்த்திக் லெட்சுமி நன்றி கூறினார்.

Related Stories:

>