×

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி சிலம்பாட்டம் மூலம் விழிப்புணர்வு பேரணி

திருவில்லிபுத்தூர், மார்ச் 8: திருவில்லிபுத்தூரில் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி சிலம்பாட்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தமிழகத்தில் ஏப்.6ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுவதையொட்டி நூறு சதவீத வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்பதற்காக தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.திருவில்லிபுத்தூர் தெற்குரத வீதி - மேலரத வீதி சந்திப்பில் 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற வேண்டும். ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என்ற விழிப்புணர்வு பதாகைகளுடன் சிறுவர், சிறுமியர் சிலம்பாட்டம் ஆடிக்கொண்டு கோஷமிட்டவாறு நான்கு ரத வீதிகள் வழியாக வந்தனர்.விழிப்புணர்வு பேரணியில் சிலம்பாட்டம், வாள் சுற்றுதல் உள்ளிட்டவைகளை நிகழ்த்தியவாறு பள்ளி மாணவ, மாணவிகள் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

தேர்தல் நடத்தும் அலுவலர் முருகன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணன், தேர்தல் பிரிவு தாசில்தார் வடிவேல், வட்ட வழங்கல் அதிகாரி கோதண்டராமன், கிராம நிர்வாக அதிகாரி ராஜகுரு, வருவாய் ஆய்வாளர் அனந்தகிருஷ்ணன், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பால் பால்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சிவகாசி
நூறு சதவீத வாக்குப்பதிவு ஏற்படுத்தும் வகையில் ரசு அலுவலர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்ட டூவீலர் பேரணி சிவகாசியில் நடைபெற்றது. எஸ்ஐ அலுவலகத்தில் தொடங்கிய பேரணி சிவகாசி நகர் மற்றும் திருத்தங்கல் பகுதியில் சுற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். முன்னதாக பேரணியை கலெக்டர் கண்ணன் தொடங்கி வைத்தார். சப்-கலெக்டர் தினேஷ்குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வத்திராயிருப்பு
வத்திராயிருப்பு அருகே முஸ்லிம் பள்ளிவாசல் முன்பு 100 சதவீத வாக்களிப்பதை உறுதிப்படுத்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வத்திராயிருப்பு வருவாய் ஆய்வாளர் மாரிமுத்து, தேர்தல் பிரிவு வருவாய் ஆய்வாளர் ராமகிருஷ்ணன், கோட்டையூர் வருவாய் ஆய்வாளர் நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Silambattam ,
× RELATED மன்னார்குடியில் தமிழர்களின்...