×

திமுக கூட்டணி வெற்றி பெற பாடுபடுவோம் மதிமுக கூட்டத்தில் தீர்மானம்

தேனி, மார்ச் 8: சட்டமன்றத் தேர்தலில் மதிமுக அங்கம் வகித்துள்ள திமுக கூட்டணி வெற்றிக்கு பாடுபடுவோம் என தேனியில் நடந்த மதிமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேனி மாவட்ட மதிமுக நிர்வாவாகிகள் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் தேனியில் நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் பரசுராமன், மாவட்ட துணைச் செயலாளர் குமணன் தொழுராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் பொன்முடி வரவேற்றார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தின்போது, ‘போடி-மதுரை அகல ரயில் பாதைத் திட்ட பணிகளை விரைவுபடுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் எதிர்ப்பை மீறி நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டிக்கிறோம். வருகிற சட்டமன்றத் தேர்தலில் தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் மதிமுக அங்கம் வகிக்கும் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடுவோம் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் மரிக்குண்டு பரமசிவம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் தேனி நகர செயலாளர் பெரியகருப்பன் நன்றி கூறினார்.

Tags : DMK ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...