×

வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்கம், வெள்ளி திருட்டு: சங்கராபுரம் அருகே துணிகரம்

 

சங்கராபுரம், ஜூன் 15: வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்கம், 300 கிராம் வெள்ளி, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே விரியூர் காட்டுக்கொட்டாய் பகுதியில் லூகாஸ் அந்தோணி ராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். விவசாய வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் குடும்பத்துடன் சின்னசேலம் அருகே உள்ள மேல் நாரியப்பனூர் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தி விட்டு மீண்டும் நேற்று காலை வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை மற்றும் 300 கிராம் வெள்ளி பொருட்கள், ரூ.12,000 ரூபாய் பணம் திருடு போயுள்ளது. இதுகுறித்து சங்கராபுரம் காவல் நிலையத்திற்கு லூகாஸ் அந்தோணி ராஜ் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார், கொள்ளை நடந்த வீட்டில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Shankarapuram ,Lucas Anthony Raj ,Viriyur Kattukottai ,Kallakurichi district ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...