காரைக்குடி அருகே ரூ.3.34 லட்சம் பணம் பறிமுதல்

காரைக்குடி, மார்ச் 8:  காரைக்குடி அருகே பறக்கும்படை நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3.34 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.காரைக்குடி அருகே குன்றக்குடி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி மல்லிகார்ஜூன் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.  நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கை மேற்கொண்ட போது புதுக்கோட்டையில் இருந்து காரைக்குடி நோக்கி வந்த காரை சோதனை செய்ததில் உரிய ஆவணம் இன்றி வைத்திருந்த 3 லட்சத்து 34 ஆயிரத்து 180 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories:

>