திமுக செயற்குழு கூட்டம்

காளையார்கோவில், மார்ச் 8:  காளையார்கோவிலில் சிவகங்கை மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சார் கேஆர் பெரியகருப்பன் எம்எல்ஏ, மாநில இலக்கிய அணி தலைவர் தென்னவன் ஆகியோர் உத்தரவின்படி தெற்கு ஒன்றியத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தெற்கு ஒன்றிய செயலாளர் யோக கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வர் ஆக்க வேண்டும். நமது பகுதியில் போட்டியிடும் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் தெற்கு ஒன்றிய செயலாளர் பேசுகையில், காளையார்கோவில் தெற்கு ஒன்றியதிற்கு உட்பட்ட 14 ஊராட்சிகளிலும் அதிகப்படியான வாக்குகள் பெற்றுத்தரும் கிளை கழக செயலாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இக்கூட்டத்திற்கு பொறுப்புக் குழு உறுப்பினர்கள், பிஎல்ஏ 2 பாக முகவர்கள், சார்பு அணி நிர்வாகிகள், ஊராட்சி நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் கழக தொண்டர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.

Related Stories:

>