×

திருமங்கலத்தில் விடுமுறை தினத்தில் பயிற்சி முகாம் மண்டல அலுவலர்கள் அதிருப்தி

திருமங்கலம், மார்ச் 8: திருமங்கலம் தொகுதி மண்டல அலுவலர்கள், துணை மண்டல அலுவலர்களுக்கான வாக்குபதிவு பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. தேர்தல் அதிகாரி சவுந்தர்யா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் திருமங்கலம், கள்ளிக்குடி, டி.கல்லுப்பட்டி ஒன்றியங்களை சேர்ந்த மண்டல அலுவலர்கள், துணை மண்டல அலுவலர்கள் கலந்து கொண்டனர். தேர்தல் அதிகாரி சவுந்தர்யா பேசுகையில், ‘‘தேர்தலில் பணிபுரியும் மண்டல மற்றும் துணை மண்டல அலுவலர்கள் கட்டாயம் வாக்குசாவடி மையங்களை நேரில் சென்று பார்வையிட வேண்டும். தொகுதி மற்றும் மையம் குறித்த வரைபடம் தயாரித்து வழங்கப்படும் இண்டர்நெட் வசதி செய்து தரப்படும். கட்டாயம் வாக்குச்சாவடி மையத்தில் மின்வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளதா என பார்த்து கொள்ளுங்கள்.

இவற்றில் எதுவும் குறைகள் இருந்தால் தேர்தல் அலுவலகத்தைதொடர்பு கொள்ளலாம். இதே போல் மையத்தின் அருகேயுள்ள போலீஸ் ஸ்டேசன் எது என்பதனை அறிந்து கொண்டு அதன் போன் நம்பரை தெரிந்து வைத்து கொள்ள வேண்டும்’’ என தெரிவித்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தில் மண்டல அலுவலர்கள், துணை மண்டல அலுவலர்களுக்கு திருமங்கலம் தொகுதியில் பயிற்சி முகாம் நடைபெற்றது. இது தேர்தல் அலுவலர்களிடம் கடும் அதிருப்தியை உண்டாக்கியது.

தேர்தல் அலுவலர்களில் பெரும்பாலானோர் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறையை சேர்ந்தவர்களாக உள்ளனர். இவர்களுக்கு ஞாயிற்றுகிழமை ஒருநாள்தான் விடுமுறை. அந்த தினத்தில் பயிற்சி முகாம் என கூட்டம் நடத்துவது நியாயமா என அவர்கள் கேள்வி எழுப்பினர். மாவட்டத்தில் மற்ற தொகுதிகளில் வேலை நாள்களில் இதுபோன்ற பயிற்சி முகாமை நடத்தியபோது திருமங்கலம் தொகுதியில் மட்டும் ஞாயிற்றுக்கிழமை நடத்துவது வேதனையளிப்பதாக அவர்கள் புலம்பி சென்றனர்.

Tags : Thirumangalam ,
× RELATED மதுரை திருமங்கலம் அருகே விபத்தில் 4 பேர் பலி