பழநி, மார்ச் 8: பழநி புறநகர், சிவகிரிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ராமநாதன் நகரில் தேர்தல் விதிமுறையை மீறி பாஜவினர் அரசுக்கு சொந்தமான மோட்டார் கட்டிடத்தின் சுவற்றில் மோடி படம் பொறித்த போஸ்டர் ஒட்டி உள்ளனர். இதனை அடிவாரம் எஸ்.ஐ பத்ரா தடுத்துள்ளார். அப்போது பாஜ நிர்வாகிகள் எஸ்ஐயை மிரட்டும் வகையில் பேசினர். பாஜவினர் எஸ்ஐயை மிரட்டும் வீடியோ பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் வைரலானது. இச்சம்பவம் பழநி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.