×

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 17ம் தேதி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்: கொறடா எ.வ.வேலு அறிவிப்பு

சென்னை: வரும் 17ம் தேதி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என கொறடா எ.வ.வேலு அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 18ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது.

ஆளுநர் உரை தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 17ம் தேதி மாலை 6 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், ‘கலைஞர் அரங்கில்’ நடைபெறும். அதுபோது கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Dimuka Dhawar ,CORADA ,Velu ,Chennai ,Tamil Nadu Assembly ,
× RELATED 100% எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்த...