தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு பூஜை

பட்டிவீரன்பட்டி,  மார்ச் 8: பட்டிவீரன்பட்டி ஸ்ரீபகவதியம்மன் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை  முன்னிட்டு ஸ்ரீ கால பைரவருக்கு பால், தேன், கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம்  உட்பட 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து  சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீகாலபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த  சிறப்பு பூஜையில் வத்தலக்குண்டு, அய்யம்பாளையம், வாடிப்பட்டி உட்பட பல்வேறு  பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை  விழாக்குழுவினர், ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர். இதேபோல் சுயம்பு  நாகேஸ்வரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்வர்ண ஆகர்ஷ்ண பைரவருக்கும்  தேய்பிறை அஷ்டமி பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது.

Related Stories:

>