×

அகில இந்திய காங்கிரஸ் தலைவராகிறார் ப.சிதம்பரம் தமிழக காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூரை நியமிக்க முடிவு? காங்கிரசில் நிலவும் குழப்பத்துக்கு முடிவு கட்ட திட்டம்

சென்னை: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பதவிக்காலம் அக்டோபர் மாதத்துடன் முடிவடைகிறது. அவருக்குப் பதிலாக ப.சிதம்பரம் புதிய தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் சித்தராமையாவும் தலைவர் பதவிக்கான ரேசில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக காங்கிரசிலும் அதிரடி மாற்றத்தை கொண்டு வர கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.

தமிழக சட்​டப்​பேரவைத் தேர்​தல் முடிவு​கள் வெளி​யானதும் தமிழ காங். தலைவர் செல்​வப்​பெருந்​தகையை மாற்ற மேலிடம் முடிவு செய்​திருப்​பதாக தகவல் வெளி​யாகி​யிருக்​கிறது. அவருக்கு மாற்றாக, விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூரை தலைவராகக் கொண்டு வர பரிசீலித்து வருவதாக தெரிகிறது. எம்.பி.க்கள் விஜய் வசந்த், விஷ்ணு பிரசாத், முன்னாள் எம்பி டாக்டர் செல்லக்குமார் உள்ளிட்டோரும் தலைவர் பதவிக்கு காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.

 

Tags : P. Chidambaram ,All ,India Congress ,President ,Manickam Thakur ,Tamil Nadu Congress ,Congress ,Chennai ,Mallikarjun Kharge ,Karnataka ,Minister ,Siddaramaiah ,
× RELATED அளவிற்கு மேல் நச்சுத் தன்மை வாய்ந்த...